சூர்யா 44வது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
ADDED : 375 days ago
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 44வது படத்தின் படப்பிடிப்பு கடத்த ஜூன் மாதம் அந்தமானில் தொடங்கியது. அதையடுத்து ஊட்டி, சென்னை என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இறுதி நாள் படப்பிடிப்பின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளயிட்டுள்ளார் சூர்யா.
அந்த வகையில், நான்கே மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அவர்களுடன் ஜெயராம், நாசர், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.