ஹரிஷ் கல்யாண் படத்தில் இணையும் சுனில்
ADDED : 375 days ago
நடிகர் கவினை வைத்து ‛லிப்ட்' என்ற படத்தை தந்தவர் வினித் வரபிரசாத். இந்தபடம் ஓரளவு வரவேற்பை பெற்றது. இவரின் அடுத்த படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் மலையாளம் நடிகர் செம்பன் வினோத் நடிக்கவுள்ளார் என்கிறார்கள். இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் துவங்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் சுனில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். ஏற்கனவே தமிழில் இவர் ஜெயிலர், மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்தவர். தற்போது அஜித்தின குட் பேட் அக்லீ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.