வெப் சீரியல் இயக்கும் நடிகை ரேவதி!
ADDED : 360 days ago
பாரதிராஜாவின் 'மண்வாசனை' என்ற படத்தில் அறிமுகமான ரேவதி, அதன் பிறகு 'புன்னகை மன்னன், மௌன ராகம், அஞ்சலி' என பல படங்களில் நடித்தார். அதோடு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்து வந்தார். கடந்த 2002ம் ஆண்டு 'மீடிர் மை பிரண்ட்' என்ற பெயரில் ஒரு ஆங்கில படத்தை இயக்கி சிறந்த படத்திற்கான விருது பெற்றார்.
அதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு 'சலாம் வெங்கி' என்ற ஹிந்தி படத்தை இயக்கினார். இந்த படத்தில் கஜோல், விஷால் ஜெத்வா, ராகுல் போஸ் ஆகியோர் நடித்தார்கள். இந்நிலையில் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்காக ஒரு வெப் தொடர் இயக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் ரேவதி. இந்த தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ளது.