வெளியானது ரஜினியின் ‛வேட்டையன்' : ரசிகர்கள் கொண்டாட்டம்
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின் ரஜினி நடிப்பில் உருவான படம் ‛வேட்டையன்'. ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்க, அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பஹத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. போலீஸ் தொடர்பான ஆக் ஷன் கதையில் அதிரடி படமாக உருவாகி உள்ளது.
வெளிமாநிலங்களில் வந்த ரசிகர்கள் கருத்துப்படி படம் நன்றாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ரஜினிக்கு நிச்சயம் கம்பேக் படம் என்றும், படம் அருமையாக இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
படம் பார்த்த பிரபலங்கள்
ரஜினியின் வேட்டையன் படத்தின் முதல் காட்சியை நடிகர்கள் விஜய், தனுஷ், இயக்குனர்கள் வெங்கட்பிரபு, ஐஸ்வர்யா, சவுந்தர்யா, இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்தனர்.