உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிறுவர்களை மையமாக கொண்ட தமிழ் டார்க் காமெடி தொடர்: 18ம் தேதி வெளியாகிறது

சிறுவர்களை மையமாக கொண்ட தமிழ் டார்க் காமெடி தொடர்: 18ம் தேதி வெளியாகிறது


இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ஞ் தயாரித்துள்ள வெப் தொடர் 'ஸ்னேக்ஸ் அண்ட் லாடர்ஸ்'. அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோரின் இயக்கத்தில் உருவாகி உள்ளது. இந்தத் தொடரில் நவீன் சந்திரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீந்தா, ஸ்ரீஜித் ரவி, சம்ரித், சூர்யா ராகவேஷ்வர், சூர்யகுமார், தருண், சாஷா பரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

2000ம் ஆண்டு கால கட்டத்தில் நடைபெறுவதாக அமைக்கப்பட்ட திரில்லர் கதைக் களம். கான்வென்டில் படிக்கும் 5 சிறுவர்கள் ஒரு சாகசப் பயணம் மேற்கொள்கிறார்கள். அப்போது அவர்கள் பெரும் சிக்கில் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள். போலீஸ் அதிகாரிகள் நந்தா, நவீன் சந்திரா ஆகியோரின் பங்கு என்ன? என்பதுதான் கதை. டார்க் ஹியூமர் ஜார்னரில் உருவாகி உள்ளது. வருகிற 18ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. தமிழில் தயாராகி இருந்தாலும் ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !