நான்காவது முறையாக இணைந்த பாலகிருஷ்ணா, போயபட்டி ஸ்ரீனு கூட்டணி
ADDED : 375 days ago
இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு மற்றும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா இருவரும் தெலுங்கு மாஸ் மசாலா படங்களில் பெயர் போனவர்கள். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே சிம்மா, லெஞ்சன்ட், அகண்டா போன்ற படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இந்த நிலையில் இவர்கள் கூட்டணியில் நான்காவது படம் தற்போது உருவாகிறது. இப்படத்தை தற்காலிகமாக ‛BB4' என அறிவித்துள்ளனர். 14 ரீல்ஸ் ப்ளஸ் நிறுவனம் தயாரிக்கும் இதன் பூஜை நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் 16ம் தேதி அன்று நடைபெறுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர். முந்தைய படங்களை போன்றும் இந்த படமும் பக்கா ஆக் ஷன் நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாக போகிறது.