20 ஆண்டுகளுக்குப் பின் காமெடி ஹாரர் படத்தில் இணையும் பிரபுதேவா - வடிவேலு
ADDED : 420 days ago
பிரபுதேவா ஹீரோவாக நடித்த காதலன், ராசைய்யா, மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ், மனதை திருடிவிட்டாய் என பல படங்களில் காமெடியனாக நடித்தவர் வடிவேலு. கடைசியாக விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தில் அவர்கள் இருவரும் இணைந்து நடித்தார்கள். இந்த நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்கிறார்கள். மகா நடிகன், இங்கிலீஷ்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஷக்தி சிதம்பரம் இயக்கும் படத்தில் பிரபு தேவாவும், வடிவேலுவும் மீண்டும் இணையப் போகிறார்கள். காமெடி கலந்த ஹாரர் கதையில் இந்த படம் உருவாகிறது. தற்போது இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.