உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகன்களின் கையால் ஊழியர்களுக்கு விஜயதசமி பரிசளித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்

மகன்களின் கையால் ஊழியர்களுக்கு விஜயதசமி பரிசளித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்

காதலித்து திருமணம் செய்தவர்கள் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஒவ்வொரு பண்டிகை நாட்களையும் தங்களது மகன்களுடன் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியர். இந்த நிலையில் நேற்று விஜயதசமி விழாவையும் அவர்கள் கொண்டாடி உள்ளார்கள்.

அதுமட்டுமின்றி தங்களது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு அவர்கள் பணம் மட்டும் பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளார்கள். குறிப்பாக அவர்களுக்கு பரிசு பொருட்களை தங்களது இரண்டு மகன்களின் கையால் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்கள். இது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !