உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சின்னத்திரையில் ஹீரோவாக களமிறங்கும் சிநேகன்

சின்னத்திரையில் ஹீரோவாக களமிறங்கும் சிநேகன்


சினிமா பாடலாசிரியரான சிநேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். சினிமாவில் நடிகராக என்ட்ரி கொடுத்த சிநேகனுக்கு வெள்ளித்திரை பெரிய அளவில் கைகொடுக்காத நிலையில் தற்போது சின்னத்திரையில் ஹீரோவாக களமிறங்குகிறார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள பவித்ரா என்கிற தொடரில் சிநேகன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அனிதா சம்பத் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். தற்போது இந்த தொடருக்கான புரொமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !