ஓமஹாவில் ரஜினிகாந்தின் 'வேட்டையன்' : திருவிழாவாக கொண்டாடிய ரசிகர்கள்
ADDED : 438 days ago
ஓமஹா (நெபிராஸ்கா) நகரத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்திய நிகழ்வு நடந்தது. நடிகர் ரஜினிகாந்தின் சமீபத்திய படமான வேட்டையன் படம் அங்குள்ள திரையரங்கில் வெளியானது. முதல் காட்சியின்போது, ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர். ராகா மியூசிக்கல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரமாண்ட இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்நகரில் உள்ள தமிழர்கள் பெருமளவு இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.