உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிந்திக்கு செல்லும் லோகேஷ் கனகராஜ்!

ஹிந்திக்கு செல்லும் லோகேஷ் கனகராஜ்!


லியோ படத்தை அடுத்து ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் ரஜினியுடன் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, பாலிவுட் நடிகர் அமீர்கான் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். மேலும், கூலி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்வதற்கு முன்னதாகவே அமீர்கானிடத்தில் ஒரு கதை சொல்லி ஓகே பண்ணி வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

அதனால் கூலி படத்திற்கு பிறகு அந்த படத்தில் நடிக்க அமீர்கான் சம்மதம் தெரிவித்தால், 2026ல் அப்படத்தை படமாக்குவேன் என்று கூறும் லோகேஷ் கனகராஜ், ஒருவேளை 2026ல் அமீர்கான் கால்ஷீட் தரவில்லை என்றால் கைதி- 2 படப்பிடிப்பை தொடர திட்டமிட்டு உள்ளாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !