நிரோஷாவை அலேக்காக தூக்கிய கதிர்
ADDED : 356 days ago
பிரபல சினிமா நடிகை நிரோஷா நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ்-2 தொடரில் நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ்-2 ஷூட்டிங் ஸ்பாட்டில் நிரோஷாவுக்கு மகனாக நடித்து வரும் வீஜே கதிர், நிரோஷாவை அலேக்காக தூக்கிச் சென்று சேரில் உட்கார வைக்கிறார். அப்போது நிரோஷாவும் சேரில் உட்கார சங்கடப்படுகிறார். இதனால் அவருக்கு என்ன ஆச்சு? என பலரும் கேட்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த வீடியோவை நிரோஷா தனது இன்ஸ்டாகிராமில், 'வாழ்க்கையில் எவ்வளவு தூரம் சென்றாலும் மகன் தன் தாயின் அன்பை சுமந்து கொண்டிருப்பான்' என கேப்ஷனிட்டு பகிர்ந்துள்ளார்.