உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குருவாயூர் அம்பல நடையில் இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த பிரித்விராஜ்

குருவாயூர் அம்பல நடையில் இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த பிரித்விராஜ்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படம் வெளியானது. புது மனைவி தனக்கு அடங்கிப்போக வேண்டும் என நினைக்கும் திமிர்பிடித்த இளம் கணவனுக்கு அவள் எப்படி பாடம் புகட்டுகிறாள் என காமெடியாக இந்த படம் சொன்னது. அதனால் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. இந்த படத்தை விபின் தாஸ் என்பவர் இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக பிரித்விராஜ் மற்றும் இயக்குனர் பஷில் ஜோசப், நிகிலா விமல் ஆகியோரை வைத்து குருவாயூர் அம்பல நடையில் என்கிற படத்தை இயக்கினார்.

அந்த படமும் கடந்த மே மாதம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பிரித்விராஜூடன் தனது அடுத்த படத்திற்காக மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார் இயக்குநர் விபின்தாஸ். இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு சந்தோஷ் டிராபி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பை பிரித்விராஜின் பிறந்தநாளான நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !