உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவாவை தொடர்ந்து பிரசாந்த் நீலுடன் இணையும் அஜித்

சிவாவை தொடர்ந்து பிரசாந்த் நீலுடன் இணையும் அஜித்

மகிழ்திருமேனி இயக்கியுள்ள விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்திருக்கும் அஜித் குமார், அதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து ஏற்கனவே தன்னை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கும் அஜித், அந்த படத்தை முடித்ததும் கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஸ்பெயினில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு அஜித்தின் விதவிதமான ஸ்டைலான போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்தவகையில் தற்போது கருப்பு நிற ஆடை மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து அஜித் ஸ்டைலாக இருக்கும் போட்டோ வெளியாகி வைரலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !