பிரசாந்துடன் அரவிஷ் - வைரலாகும் த்ரோபேக் புகைப்படம்
ADDED : 352 days ago
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி தொடரின் மூலம் புகழ் பெற்ற நடிகராக வலம் வருகிறார் அரவிஷ். ஆனால், இவர் நீண்ட நாட்களாகவே சீரியல்களில் நடித்து வருகிறார். அண்மையில் இது தான் தனது முதல் ப்ரேம் என 2013 ஆம் ஆண்டில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போது நடிகர் பிரசாந்துடன் பல வருடங்களுக்கு முன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அரவிஷ் வெளியிட்டுள்ளார். அரவிஷின் த்ரோபேக் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வைரலாகி வருகிறது.