உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புல்லட்டில் கெத்தாக போஸ் கொடுத்த ப்ரீத்தி ஷர்மா

புல்லட்டில் கெத்தாக போஸ் கொடுத்த ப்ரீத்தி ஷர்மா

சின்னத்திரையில் திருமணம் தொடரில் அறிமுகமானவர் ப்ரீத்தி ஷர்மா. அந்த தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவருக்கு சித்தி 2 தொடரின் மூலம் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு மீண்டும் மலர் தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த ப்ரீத்தி ஷர்மா, அண்மையில் தான் அந்த தொடரிலிருந்து வெளியேறினார். அதன்பின் இன்ஸ்டாகிராமில் கிளாமராக போட்டோக்கள் வெளியிட்டு வந்த அவர் தற்போது புல்லட்டில் கெத்தாக அமர்ந்து போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் ப்ரீத்தி ஷர்மா ஆக்டிவாக இருப்பதை பார்க்கும் ரசிகர்கள் சீக்கிரமே சீரியலில் கம்பேக் கொடுக்க சொல்லி அவரிடம் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !