உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேம் சேஞ்சர் - ஒரு பாடலுக்கே செலவு 20 கோடி?

கேம் சேஞ்சர் - ஒரு பாடலுக்கே செலவு 20 கோடி?

ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராம் சரண் நடித்து வெளியாக உள்ள படம். கடந்த சில வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்ததால் படம் வெளியாவதிலும் இழுபறி நீடித்து ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

இதனிடையே, இப்படத்தில் ஒரு பாடலுக்காக மட்டும் சுமார் 20 கோடி செலவு செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவிலேயே இதுவரையில் இப்படி ஒரு பாடலைப் படமாக்கியதில்லை என்று சொல்லுமளவிற்கு அந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறார்களாம். பாடல்களைப் பொறுத்தவரையில் அதை பிரம்மாண்டமாகவும் அழகியல் ரசனையுடனும் படமாக்குபவர் ஷங்கர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தப் படத்தில் அப்படி 20 கோடி செலவு செய்து என்னதான் செய்திருக்கிறார் என்பதைப் பார்க்க தெலுங்கு ரசிகர்கள் இப்போதே ஆர்வமாக உள்ளார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !