உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தி கோட்' பாராட்டு : ரஜினிக்கு வெங்கட் பிரபு நன்றி

'தி கோட்' பாராட்டு : ரஜினிக்கு வெங்கட் பிரபு நன்றி

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இசையமைப்பில், விஜய் நாயகனாக நடித்து செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் 'தி கோட்'. இப்படம் 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றது. தமிழகத்தில் 100 கோடி ஷேர் வந்ததற்கும் விஜய் கேக் வெட்டி கொண்டாடினார்.

தற்போது படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். “நன்றி தலைவா, 'தி கோட்' படத்தைப் பார்த்து அழைத்தற்கும், அன்பை வெளிப்படுத்தியதற்கும் நன்றி. முழு மனதுடன் பாராட்டியதற்கு மீண்டும் நன்றி. என்றென்றும் நன்றியுடன், எல்லா அன்பையும் உங்களுக்கு அனுப்புகிறேன்” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் பிரபு.

'தி கோட்' படம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகும், 45 நாட்களைக் கடந்து இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !