மேலும் செய்திகள்
நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா?
319 days ago
சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ்
319 days ago
விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின்
319 days ago
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் என் மரணம் இப்படித்தான் நிகழ வேண்டும் என்று கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். அவரது ரசிகர்கள் துடிதுடித்து போய் இப்படியெல்லாம் பேசாதீர்கள் என்கிற ரேன்ஞ்சில் அவருக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷாருக்கானிடம், 'நீங்கள் எப்போதும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?' என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ஷாருக்கான் பதிலளிக்கையில், “நிச்சயமாக. நான் மரணம் அடையும் நாள் வரை நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். 'ஆக்ஷன்', 'கட்' என்ற சொற்கள் சாகும்வரை எனக்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நான் இறப்பது போல் நடிக்கும் காட்சியில் இயக்குனர் 'ஆக்ஷன்' என்று சொல்ல வேண்டும். நான் இறப்பது போன்று நடிப்பேன். இயக்குனர் 'கட்' என்று சொன்ன பிறகு நான் எழுந்திருக்க கூடாது. நிஜமாகவே இறந்திருக்க வேண்டும். உயிர் பிரியும் கடைசி நிமிடம் வரை நான் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது எனது வாழ்நாள் கனவு” என்று கூறியிருக்கிறார்.
ஷாருக்கானின் இந்த பதில் அனைவரையுமே நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
319 days ago
319 days ago
319 days ago