திருச்செந்தூர் கடற்கரையில் பாண்டிராஜ் - விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு
ADDED : 356 days ago
பசங்க, வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, இது நம்ம ஆளு, கதகளி, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். அடுத்ததாக விஜய் சேதுபதி, நித்யா மேனனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதன் படப்பிடிப்பு இப்போது திருச்செந்தூரில் நடந்து வருகிறது. கடற்கரை பகுதிகளில் விஜய் சேதுபதி உட்பட பலர் நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. அடுத்து தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட சில கடற்கரை பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.