புஷ்பா 2 படத்தில் ஸ்பெஷல் பாடலில் ஷ்ரத்தா கபூர்
ADDED : 356 days ago
கடந்த 2021ம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'புஷ்பா'. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் உருவாகி வருகிறது. ரூ.400 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் புஷ்பா 2ம் பாகம் உருவாகி வருகிறது.
புஷ்பா முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா ' என்கிற பாடலுக்கு சமந்தா நடனமாடி உலகளவில் இந்த பாடல் வைரலானது. இதே போல் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் உள்ளது. முதலில் இந்த பாடலில் நடனம் ஆட ஸ்ரீ லீலா, த்ரிப்தி டிமிரி ஆகியோருடன் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த பாடலுக்கு பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையான ஷ்ரத்தா கபூர் நடனம் ஆடியுள்ளார். இதற்காக அவர் பெரும் தொகை சம்பளமாக பெற்றதாக தெரிவிக்கின்றனர்.