ஜெயிலர் 2 படத்தில் இணையும் தனுஷ்?
ADDED : 407 days ago
கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் உலகளவில் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.
ஜெயிலர் முதல் பாகத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இந்த பாகத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்கள் அல்லாமல் இப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷூடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இப்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.