உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை தவறவிட்ட பூமிகா

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை தவறவிட்ட பூமிகா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் 90 இறுதி காலகட்டத்திலும் 2000 தொடக்க காலத்திலும் பிஸியான நாயகியாக வலம் வந்தவர் நடிகை பூமிகா சாவ்லா. கடந்த சில வருடங்களாக குறிப்பிடத்தக்க படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இப்போது தமிழில் ராஜேஷ் எம் இயக்கத்தில் 'பிரதர்' படத்தில் ஹீரோ ஜெயம் ரவிக்கு அக்காவாக நடித்துள்ளார் பூமிகா. அக்கா - தம்பி பாசத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. தீபாவளி வெளியீடாக அக்., 31ல் படம் வெளியாகும் சூழலில் இதற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

பூமிகா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, நான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட சில படங்களில் என்னால் நடிக்க முடியவில்லை. அது போன்று தெலுங்கில் 'அஷ்ட சம்மா' எனும் படத்தை மிஸ் செய்தேன் அப்படம் ஹிட் ஆனது. அப்படம் என் திருமண காரணங்களால் நடிக்க முடியவில்லை. இது போன்று தான் தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடிப்பதாக இருந்தது, ஆனால் நடிக்கவில்லை. அந்த காலகட்டத்தில் நான் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க பொருந்தவில்லை என்று எண்ணினேன் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !