உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஸ்டார்' படத்தில் நான் சொன்னது தான் நடந்தது - கவின் ஓபன் டாக்

‛ஸ்டார்' படத்தில் நான் சொன்னது தான் நடந்தது - கவின் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான கவின் தற்போது ' ப்ளடி பக்கர்' எனும் படத்தில் நடித்துள்ளார். சிவபாலன் முத்துகுமார் இயக்க, இயக்குனர் நெல்சன் தயாரித்துள்ளார். இப்படம் வருகின்ற அக். 31ம் தேதி திரைக்கு வருவதையொட்டி இதற்கான புரொமோசன் நிகழ்ச்சிகளில் கவின் கலந்து கொண்டு வருகிறார். இப்போது அளித்த பேட்டி ஒன்றில் ‛ஸ்டார்' படத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், “ஸ்டார் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்தது. ஆனால் ஸ்டார் படத்தின் கதை கேட்கும்போது சரியாக தான் இருந்தது. அந்த நம்பிக்கையில் தான் நடித்தேன். ஆனால், இறுதியில் படத்தை பார்க்கும் போது படம் கொஞ்சம் நீண்டு கொண்டே செல்வதாக தோன்றியது. படம் நன்றாக உள்ளது, அதற்கான காட்சிகளும் நிறைய உள்ளது. அதனால், சில காட்சிகள் படத்திலிருந்து விலகி நிற்கின்றது .அது நன்றாக உள்ள காட்சிகளையும் சேர்த்து பாதிக்கிறது. எனவே ஒரு 20 நிமிட காட்சிகளை படத்திலிருந்து நீக்கிவிடலாம் என கூறினேன். ஆனால், அதை மறுத்த படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருந்தனர். இறுதியில் நான் சொன்னது தான் நடந்தது. இருப்பினும் கடைசியில் தயாரிப்பாளர் ஹேப்பி தான்” என கலகலப்பாக கூறினார் கவின்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !