உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛பார்க்கிங்' பட இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன்

‛பார்க்கிங்' பட இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன்

கடந்தாண்டு இறுதியில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'பார்க்கிங்'. இதன் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். பார்க்கிங் பிரச்னையை வைத்து இந்தப்பட கதை வெளியானது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு ஒரு படத்தை இவர் இயக்குவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‛அமரன்' படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படங்களை எல்லாம் முடித்ததும் ராம்குமார் பாலகிருஷ்ணன் படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !