உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குட் பேட் அக்லி படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்பிய திரிஷா

குட் பேட் அக்லி படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்பிய திரிஷா

லியோ, கோட் படங்களை அடுத்து விடாமுயற்சி தக் லைப், விஷ்வாம்பரா, எவிடன்ஸ் போன்ற படங்களில் நடித்து முடித்து இருக்கிறார் திரிஷா. இந்த நிலையில் மீண்டும் அஜித் குமாருடன் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லியில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற்று வரும் நிலையில், திரிஷாவும் கலந்து கொண்டு நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டிலிருந்து சென்னை திரும்பி இருக்கும் திரிஷா, ஒரு நகைக்கடை விளம்பர படத்தில் நடித்து வருகிறார். இதில் நடித்து முடித்ததும் மீண்டும் அவர் குட் பேட் அக்லி படப்பிடிப்புக்காக ஸ்பெயின் செல்ல இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !