மேலும் செய்திகள்
பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா
316 days ago
'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம்
316 days ago
அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு
316 days ago
பாலிவுட்டின் பிரபல நடிகை நிஹாரிகா ரைசாடா. சூர்யவன்ஷி, ஐபி71 போன்ற ஹிந்தி படங்களிலும், பிறமொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது ‛சப்னா ஏ ரன் ஆப் லவ்' என்ற படத்தில் நடிக்கிறார். விஷால் கெய்க்வாட் இயக்கும் இதில் ஹீரோவாக மராத்தி நடிகர் சந்தோஷ் மிஸ்கர் நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் இடம் பெறும் காதல் பாடலுக்கான படப்பிடிப்பை நிஹாரிகா முடித்துள்ளார். பாடல்களை பாடலாசிரியர் சமீர் அஞ்சான் எழுதி உள்ளார்.
நிஹாரிகா ரைசாடா கூறுகையில், ‛‛படத்தில் நைனா என்ற பெண்ணாக நடிக்கிறேன். எனது கதாபாத்திரம் மற்றும் படம் குறித்து மிகவும் ஆர்வமாக உள்ளேன். படத்தில் ஒரு ஸ்பெஷல் காட்சி ஒன்று உள்ளது. அதற்காகவே இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். அது பார்வையாளர்களை நிச்சயம் ஆச்சர்யப்படுத்தும்'' என்றார்.
பாடலாசிரியர் சமீர் அஞ்சான் கூறுகையில், ‛‛சப்னா படத்தின் கதை என்னை பாடல்கள் எழுத தூண்டியது. இப்படத்தில் 7 விதமான பாடல்கள் உள்ளன. மெல்லிசைப் பாடல்கள் மூலம் பார்வையாளர்களை மீண்டும் 90களுக்கு அழைத்துச் செல்வதே எனது முயற்சி'' என்றார்.
மும்பை, நாசிக், நேபாளம், லண்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
316 days ago
316 days ago
316 days ago