முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்!
ADDED : 3 minutes ago
இயக்குனர் முத்தையா 'குட்டிப் புலி, கொம்பன், மருது, விருமன்' போன்ற கிராமத்து ஆக்சன் படங்களை இயக்கி வெற்றிகளைப் பெற்றவர். அதேபோல் முத்தையா இயக்கத்தில் வெளியான கடந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதிலும் குறிப்பாக முத்தையா கடைசியாக இயக்கி நேரடியாக ஓடிடியில் வெளியான 'ரெம்போ' படமும் மோசமான வரவேற்பைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து அருண் விஜய், முத்தையா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக அடர்த்தியாக, நீளமான முடி வளர்த்து மற்றும் முறுக்கு மீசை வைத்து புதிய தோற்றத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளார். இந்த புதிய தோற்றத்தை அருண் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.