மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
318 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
318 days ago
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான நடிகர்களுள் ஒருவர் மறைந்த ஏ.நாகேஸ்வரராவ். தமிழில் 'தேவதாஸ், மாதர் குல மாணிக்கம், எங்க வீட்டு மகாலட்சுமி, மஞ்சள் மகிமை, கல்யாணப் பரிசு' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். 2014ம் ஆண்டு அவர் காலமானார்.
அக்கினேனி சர்வதேச அறக்கட்டளை சார்பாக 2006ம் ஆண்டு முதல் 'ஏஎன்ஆர் தேசிய விருது' வழங்கப்பட்டு வருகிறது. தேவ் ஆனந்த், ஷபனா ஆஸ்மி, அஞ்சலி தேவி, ஜெயசுதா, வைஜெயந்தி மாலா, லதா மங்கேஷ்கர், கே பாலசந்தர், ஹேமமாலினி, ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன், குடிபூடி ஸ்ரீஹரி, எஸ்எஸ் ராஜமவுலி, ஸ்ரீதேவி, ரேகா ஆகியோர் அந்த விருதை வாங்கியுள்ளார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அந்த விருது இந்த ஆண்டு நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட உள்ளது. அக்டோபர் 28ம் தேதி நடைபெற உள்ள விழாவில் நடிகர் அமிதாப்பச்சன் அதை சிரஞ்சீவிக்கு வழங்க உள்ளார்.
விருதை வாங்க வருமாறு நடிகர் சிரஞ்வீயை நேரில் சந்தித்து அழைத்துள்ளார் நாகேஸ்வரராவின் மகனும் நடிகருமான நாகார்ஜூனா. “இந்த ஆண்டு எனது அப்பா ஏஎன்ஆர்-ன் 100வது பிறந்தநாளைக் கொண்டாடுவதால் இது சிறப்பு வாய்ந்தது. ஏஎன்ஆர் விருதுகள் 2024க்காக நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் சிரஞ்சீவி ஆகியோரை அழைப்பதில் பெருமை அடைகிறேன். இந்த விருது விழாவை மறக்க முடியாத ஒன்றாக உருவாக்க வேண்டும்,” என நாகார்ஜூனா குறிப்பிட்டுள்ளார்.
318 days ago
318 days ago