உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவை தொடர்ந்து நாகார்ஜூனாவை தேடி சென்ற சிவகார்த்திகேயன்!

சூர்யாவை தொடர்ந்து நாகார்ஜூனாவை தேடி சென்ற சிவகார்த்திகேயன்!


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அமரன்'. ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் வருகின்ற அக்.,31ம் தேதி தீபாவளி பண்டிகை அன்று திரைக்கு வருவதையொட்டி இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் தமிழகத்தை கடந்து வெளிநாடுகளில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராஜ்குமார் பெரியசாமி மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த பட புரமோஷன் நிகழ்ச்சி ஒன்று ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணலில் நாகார்ஜூனா உடன் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழு உள்ள போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கங்குவா பட புரமோஷனுக்காக சூர்யா, தெலுங்கில் நாகார்ஜூனா தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவரை தொடர்ந்து இப்போது சிவகார்த்திகேயனும் நாகார்ஜூனாவை தேடி பட புரமோஷனுக்காக சென்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !