உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் மாநாடு வெற்றி : தீபாவளி தினத்தில் ரசிகர்களை சந்தித்த பின் ரஜினி வாழ்த்து

விஜய் மாநாடு வெற்றி : தீபாவளி தினத்தில் ரசிகர்களை சந்தித்த பின் ரஜினி வாழ்த்து

சென்னை : விஜய் வெற்றிகரமாக மாநாட்டை நடத்தியிருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என நடிகர் ரஜினி தெரிவித்தார்.

ஒவ்வொரு தீபாவளிப் பண்டிகைக்கும் சென்னையில் இருந்தால் தனது போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தின் முன் ரசிகர்களை சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் ரஜினி. இந்த தீபாவளிக்கும் தனது இல்லத்தின் முன்பு கூடிய ரசிகர்களை சந்தித்த ரஜினி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி : அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துகள். மக்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகள். விஜய் வெற்றிகரமாக மாநாட்டை நடத்தியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள் என்றார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டில் விஜய் பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ரொம்ப நன்றி, ரொம்ப நன்றி என பதில் அளித்துவிட்டு நழுவி சென்றார் ரஜினி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !