ஜெய் ஹனுமான் ஆக ரிஷப் ஷெட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADDED : 356 days ago
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சைஜா, அம்ரிதா, வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம் 'ஹனுமன்'. இப்படம் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமான வசூலை தந்தது.
இதன் இரண்டாம் பாகத்திற்கு 'ஜெய் ஹனுமான்' என தலைப்பு வைத்துள்ளதாக ஏற்கனவே அறிவித்தனர். தீபாவளி தினத்தை முன்னிட்டு தற்போது காந்தாரா படத்தின் மூலம் பிரபலமான ரிஷப் ஷெட்டி ஜெய் ஹனுமான் ஆக நடிக்கின்றார் என பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இந்த போஸ்டர் இப்போது சமூக வலைதளங்களைக் கலக்கி வருகிறது.