குரங்குகளுக்கு உணவளிக்க ரூ.1 கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார்
ADDED : 356 days ago
அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக சமீபத்தில் திறக்கப்பட்டது. தினமும் ஏராளமான பக்தர்கள் அங்கு சென்று வருகின்றனர். அயோத்தியில் நிறைய குரங்குகள் உள்ளதால் அங்கு இன்னும் அதிக கவனிப்புடன் பராமரிக்கப்படுகின்றன. அன்றாடம் அளவுக்கதிகமான குரங்குகளுக்கு தினமும் நேரத்திற்கு உணவு கிடைப்பதில் சிக்கல் உள்ளது. உணவு இல்லாததால் அவை அங்கு செல்லும் பக்தர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தன.
இதை கருத்தில் கொண்டு அயோத்தி கோவிலில், ஜகத்குரு ஸ்வாமி ராகவாச்சார்யா ஜி மகராஜின் வழிகாட்டுதலின் கீழ் ஆஞ்சநேய சேவா என்ற அறக்கட்டளை குரங்களுக்கு உணவளிக்கும் முயற்சியையும் நடைபெற்று வருகிது. இதில் தற்போது, பாலிவுட் நடிகரான அக்ஷய் குமாரும் இணைந்துள்ளார். இவர், அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு உணவளிப்பதற்காக ரூ.1 கோடியை நன்கொடையாக அறக்கட்டளை மூலம் வழங்கியுள்ளார்.