2 நாட்களில் ரூ.26 கோடி வசூலை எட்டிய லக்கி பாஸ்கர்
ADDED : 349 days ago
வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்து சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம் 'லக்கி பாஸ்கர்' . இப்படம் வங்கி பண மோசடி குறித்து பேசியுள்ளது. இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்த இப்படம் தற்போது உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 26.2 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு தமிழகத்தில் முதலில் 150 திரைகளில் மட்டுமே கிடைத்தது. படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து இப்படம் 220 திரைகளில் கூடுதலாக திரைகளில் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .