உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புது முகங்களின் 'தென் சென்னை'

புது முகங்களின் 'தென் சென்னை'

புதுமுகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகி வரும் புதிய ஆக்ஷ்ன் திரில்லர் திரைப்படம் 'தென் சென்னை'. வட சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன. இவற்றில் இருந்து மாறுபட்டு தென் சென்னையை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் ரங்கா. ஆக்ஷன் திரில்லர் ஜார்னரில் படம் தயாராகி வருகிறது. மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி நடித்துள்ளனர். இளங்கோ குமரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன் நாயகனாகவும் நடிக்கிறார். ஜென் மார்டின் இசை அமைக்கிறார், சரத்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !