உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மிஸ்டர் மனைவி சீரியலை விட்டு விலகிய ஸ்மிருதி

மிஸ்டர் மனைவி சீரியலை விட்டு விலகிய ஸ்மிருதி

தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர்களில் ஒன்று மிஸ்டர் மனைவி. இந்த தொடரின் ஆரம்பத்தில் ஹீரோயினாக ஷபானா நடித்து வந்தார். திடீரென அவர் விலகிவிட டெப்ஜானி மோடக் அஞ்சலியாக நடித்து வருகிறார். மிக விரைவிலேயே இந்த தொடர் முடிவுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், கவின் மலர் என்கிற முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்மிருதி சீரியலை விட்டு விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக லெட்சுமி தொடரில் நடித்து வரும் கீர்த்தி விஜய் இனி கவின் மலர் கதாபாத்திரத்தில் தொடரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !