கற்பழிப்பு காட்சிகளுக்கு ‛நோ' சொன்ன சார்பட்டா நடிகை
ADDED : 361 days ago
சார்பட்டா நடிகையை வைத்து, சுள்ளான் இயக்கிய படம் மட்டுமின்றி, உச்ச நடிகர் நடித்த படத்திலும், பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகளில் நடிக்க வைத்தனர். தற்போது அதுபோன்ற கேரக்டர்களுடன் மேலும் சில இயக்குனர்களும் அவரிடத்தில் கதை சொல்லி வருகின்றனர். இதனால், அதிர்ச்சி அடைந்த நடிகை, 'இரண்டு படத்தில் கற்பழிப்பு சீனில் நடித்ததால், தொடர்ந்து அதுபோன்ற காட்சிகளில் நடிப்பதற்கு மட்டும் தான் நான் செட்டாவேன் என்று முடிவு செய்து விடாதீர்கள்...' என்று அந்த படங்களை திருப்பி அனுப்பியுள்ளார்.
'விட்டால் என்னை முழுநேர பாலியல் காட்சி நடிகை என்ற முத்திரையை குத்தி விடுவர். இனிமேல் பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகளில் நடிப்பதில்லை என, முடிவெடுத்துள்ளேன்...' என, கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார், சார்பட்டா நடிகை.