மூன்று முக்கிய இயக்குனர்களுடன் இணையும் பிரபாஸ்!
ADDED : 349 days ago
தெலுங்கு நடிகர் பிரபாஸ் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகர் என்பதை தாண்டி இந்தியளவில் தெரிந்த நடிகராக மாறியுள்ளார். தற்போது அவரது கைவசமாக 'தி ராஜாசாப், ஸ்பிரிட், சலார் 2, கல்கி 2' ஆகிய படங்கள் உள்ளது.
இந்த நிலையில் அவரது அடுத்த படங்களை இயக்க மூன்று மொழிகளில் இருந்து முக்கிய இயக்குனர்களை தேர்ந்தெடுத்து நடிக்கவுள்ளார் பிரபாஸ். அதன்படி, தெலுங்கில் ஹனுமான் படத்தினை இயக்கிய பிரசாந்த் வர்மா, தமிழில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஹிந்தியில் ராஜ்குமார் ஹிராணி இவர்கள் இயக்கத்தில் உருவாகும் பான் இந்தியா படங்களில் பிரபாஸ் நடிக்கவுள்ளார் என்கிறார்கள்.