ஏ.ஆர். முருகதாஸ் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் வந்த சல்மான் கான்
ADDED : 352 days ago
இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் தற்போது ஹிந்தியில் நடிகர் சல்மான் கானை வைத்து 'சிக்கந்தர்' எனும் படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள பலாக்னுமா பேலஸில் நடைபெறுகிறது. இதற்காக ஏ. ஆர். முருகதாஸ், சல்மான் கான் மற்றும் படக்குழு ஹைதராபாத் வந்து இறங்கியுள்ளனர். இந்த கட்ட படப்பிடிப்பில் சல்மான் கானுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார் என்கிறார்கள்.