உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாய் பல்லவியின் 10 நிமிட நடிப்பு என் இதயத்தை வென்று விட்டது : ஜோதிகா

சாய் பல்லவியின் 10 நிமிட நடிப்பு என் இதயத்தை வென்று விட்டது : ஜோதிகா

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் படம் அமரன். வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையில் உருவான இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் மூலம் அடுத்த லெவலுக்கு சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதேபோல் இப்படத்தில் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபக்கா வர்கீஸ் வேடத்தில் நடித்த சாய் பல்லவி நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நேரத்தில் அமரன் படத்தை பார்த்த நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் அவரது நடிப்பை பாராட்டி ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ஜெய் பீம் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அடுத்த கிளாசிக் படம் இந்த அமரன். இப்படத்தின் கடைசி 10 நிமிடத்தில் சாய் பல்லவி நடிப்பு என் இதயத்தை வென்றுவிட்டது என்று அவரது நடிப்பை வெகுவாக பாராட்டி இருக்கிறார் ஜோதிகா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !