சூர்யா 45வது படத்தின் படப்பிடிப்பு எப்போது?
ADDED : 343 days ago
சூர்யா நடித்துள்ள கங்குவா படம் வருகிற 14ம் தேதி திரைக்கு வரும் நிலையில், தற்போது இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரம் அடைந்திருக்கிறார் சூர்யா. இந்த நிலையில் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தான் நடிக்க இருக்கும் 45வது படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதோடு, இந்த படம் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் சூர்யா. அந்த வகையில், ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே இயக்க திட்டமிட்டிருந்த மாசாணி அம்மன் படத்தின் கதையைத்தான் சூர்யாவுக்காக ஆன்மிகம் கலந்த பேண்டஸி படமாக மாற்றம் செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.