சுருட்டு பிடிக்கும் அனுஷ்கா, சபாஷ் சரியான போட்டி 'புகை பிடிக்க'....
இந்திய சினிமாக்களில் புகை பிடிக்கும் காட்சிகளோ, மது அருந்தும் காட்சிகளோ இடம் பெற்றால் அந்தக் காட்சிகள் திரையில் ஓடும் போது எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறும். ஆனால், சினிமா போஸ்டர்களுக்கு அப்படியான எச்சரிக்கை வாசகங்களை இடம் பெறச் செய்ய இன்னும் அரசு கட்டாயப்படுத்தவில்லை. அதனால், பல சினிமாக்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் புகை பிடிக்கும் போஸ்டர்கள் இடம் பெறுவது வழக்கமாகிவிட்டது.
கதாநாயகர்கள் புகை பிடிக்கும் போஸ்டர்கள்தான் இதுவரையில் வந்திருக்கும். அவர்களுக்கு கதாநாயகிகளும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் விதத்தில் இன்று வெளியாகியுள்ள 'காட்டி' படத்தின் முதல் பார்வையில் அனுஷ்கா சுருட்டு பிடிக்கும் போஸ்டர் வெளியாகி உள்ளது. இன்று அனுஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். பிறந்தநாளன்று வெளியிடுகிறோமே என்ற ஒரு அக்கறை கூட படக்குழுவிற்கு இல்லாதது ஆச்சரியம்தான்.
க்ரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தெலுங்கில் உருவாகி தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.