குட் நியூஸ் சொன்ன நிவேதிதா - சுரேந்தர்
ADDED : 339 days ago
சின்னத்திரை நடிகையான நிவேதிதா, ‛வாணி ராணி' தொடரில் அறிமுகமாகி தமிழில் பல தொடர்களில் நடித்திருக்கிறார். 2019ம் ஆண்டு சக நடிகரான ஆர்யனை திருமணம் செய்து கொண்ட நிவேதிதா கருத்து வேறுபாடு காரணமாக மூன்று வருடங்களுக்கு முன் ஆர்யனை விவாகரத்து செய்துவிட்டார். இதனையடுத்து திருமகள் தொடரில் நடித்து வந்த போது நடிகர் சுரேந்தருக்கும் நிவேதிதாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர கடந்த பிப்ரவரி மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இந்நிலையில், நிவேதிதா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். சில தினங்களுக்கு முன் நிவேதிதாவின் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதனையடுத்து நிவேதிதா - சுரேந்தர் தம்பதியினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.