குழந்தைக்கு 'நிலா' என பெயர் சூட்டிய ரித்திகா
ADDED : 343 days ago
நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி பாக்கியலெட்சுமி தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். வினு என்பவரை காதலித்து வந்த ரித்திகா 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சீரியலை விட்டு விலகிய ரித்திகா இன்று வரை இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தற்போது தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட முதல் போட்டோஷூட்டை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவர் அதற்கு பேமிலிகோல் என ஹேஷ்டேக் போட்டுள்ளார்.
அதோடு குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவையும் நடத்தி, ‛நிலா' என தனது மகளுக்கு பெயர் சூட்டி உள்ளதாக அறிவித்து, அது தொடர்பான போட்டோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.