ஒரே நாளில் மோதிக் கொள்ளும் சூர்யா - தனுஷ்
ADDED : 390 days ago
ராயன் படத்தை அடுத்து தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை. இப்படத்தில் தனுசுடன் அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வர இருப்பதாக தற்போது ஒரு போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அதேபோல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 44 வது படத்தையும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதனால் சூர்யாவும், தனுஷும் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதிக் கொள்வது உறுதியாகி இருக்கிறது.