மணிரத்னம் படத்தில் மீண்டும் இணையும் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்
ADDED : 340 days ago
2007ம் ஆண்டு ஹிந்தியில் மணிரத்னம் தயாரித்து, இயக்கிய குரு என்ற படத்தில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யாராய் இருவரும் இணைந்து நடித்தார்கள். இதே படத்தில் மாதவன், வித்யாபாலன் ஆகியோரும் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் நடித்தபோதுதான் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனுக்கிடையே காதல் உருவாகி திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது கமல் நடிப்பில் தக் லைப் படத்தை இயக்கியிருக்கும் மணிரத்னம் இந்த படம் திரைக்கு வந்த பிறகு மீண்டும் ஹிந்தியில் ஒரு படத்தை தயாரித்து, இயக்கப் போகிறார். அந்த படத்தில் மீண்டும் அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் இணைந்து நடிக்கிறார்கள். தக்லைப் திரைக்கு வந்த பிறகு இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.