'அமரன்' இயக்குனருடன் கைகோர்த்த தனுஷ்
ADDED : 390 days ago
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் 'அமரன்'. இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வசூல் ரீதியாகவும் பெரிதளவில் சாதனை படைத்து வருகிறது. தற்போது இந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிப்பில் தனுஷின் 55வது படத்தினை இயக்குவதாக இன்று பூஜை நிகழ்ச்சியுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றி மாறன் கலந்து கொண்டார்.