''சினிமா தொழில் 'ரிஸ்க்'; 3 மணி நேரத்தில் ரிசல்ட் தெரிந்துவிடும்'': வருண் தேஜ்
நடிகர் வருண் தேஜ் நடிப்பில் உருவாகி வரும் 'மட்கா' திரைப்படம் பான் இந்தியா ரிலீஸாக நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த படம் 60, 70 காலங்களை பற்றி பேச உள்ளதால், பல விதமான தோற்றங்களில் என்னை பார்க்கலாம். வித்தியாசமான தோற்றங்களை உருவாக்கிய இயக்குனர், மேக்கப் கலைஞர்களையே பெருமைகள் சேரும்.
படம் எடுப்பது ஒரு ரிஸ்க்கான தொழில். இதற்காக பல வருடங்கள் உழைக்கலாம், அதற்காக அதிக நேரம் செலவிடலாம். ஆனால், வெறும் 3 மணி நேரத்தில் சினிமா தொழிலில் ரிசல்ட் தெரிந்துவிடும். பாலிவுட்டில் நேரடியாக நடிப்பது இப்போதைக்கு தேவையில்லை என நினைக்கிறேன். தெலுங்கு படம் ஹிந்தியிலும், ஹிந்தி படங்கள் தெலுங்கிலும் டப் செய்யப்படுவதால், இனி மொழி பிரச்னை இல்லை; நல்ல படம் எடுக்க வேண்டும் அவ்வளவுதான். இவ்வாறு அவர் கூறினார்.