உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் அறிமுகமாகும் கயாடு லோஹர்

தமிழில் அறிமுகமாகும் கயாடு லோஹர்

தென்னிந்திய சினிமாவின் இளம் நடிகை கயாடு லோஹர். கடந்த 2021ம் ஆண்டில் கன்னடத்தில் வெளிவந்த 'முகில் பெட்டி' எனும் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். இவரின் உச்சகட்ட கவர்ச்சியால் சமூக வலைதளங்களில் வைரலானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படம் 'டிராகன்'. இதில் கதாநாயகியாக அனுபாமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். இப்போது இப்படத்தில் கயாடு லோஹர், பல்லவி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என படக்குழு அறிவித்துள்ளனர். இதன் மூலம் தமிழில் கயாடு லோஹர் அறிமுகமாகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !