சிவகார்த்திகேயனின் அடுத்த படம் எப்போது ரிலீஸ்?
ADDED : 337 days ago
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த அமரன் படம் தீபாவளிக்கு வெளியாகி இதுவரை 200 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் 23வது படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அந்த படத்தை வேகமாக முடித்து 2025ம் ஆண்டு மே மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார். அதனால் சல்மான்கான் நடிப்பில் சிக்கந்தர் படத்தையும் தற்போது இயக்கி வரும் முருகதாஸ், அதற்கு முன்னதாகவே சிவகார்த்திகேயன் 23-வது படத்தை திரைக்கு கொண்டு வரும் வேலைகளில் தீவிரமடைந்துள்ளார். மேலும், இந்த படத்தை தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி, சுதா கொங்கரா ஆகியோரின் படங்களிலும் அடுத்த ஆண்டுக்குள் நடித்து முடிக்கவும் திட்டமிட்டுகிறார் சிவகார்த்திகேயன்.